உலகில் அவ்வப்போது தோன்றிய கைத்தொழில் புரட்சிகள் உலகின் போக்கையே முழுமையாக மாற்றியிருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் நீராவி இயந்திரத்தின் கண்டு பிடிப்பு அதற்கு முன்னர் உலகம் இயங்கிய விதத்தை முற்றாக மாற்றி இருந்தது. அதே போல் 19 ஆம் நூற்றாண்டில் மின்சாரத்தையும், 20 ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்தையும் கூறலாம். இவை ஒவ்வொன்றிலும் இதற்கு முன்னர் கோலோச்சிய பல உன்னத படைப்புகளையும், தொழில் சந்தையினையும் பெறுமானம் அற்றதாக மாற்றி இருந்தன.
இத வரிசையில் இப்போது வந்து சேர்ந்திருக்கும் அரக்கன் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence). இந்த மாற்றத்திற்குத் தயார் செய்யாத எதுவும் / எவரும் விரையில் காலாவதியான வஸ்துவாகிவிடும்.
போட்டி மிகுந்த உலகில் மாற்றத்தை உள்வாங்கி முன்னேறுவதும், உறைந்து உடைந்து போவதும் எம் கையில்.